நேற்றைய பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உதவிய, கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மற்றும் ஆதரவளித்த எமது தமிழ்ப் பள்ளி பெற்றோர் மாணவர் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நிகழ்ச்சி பற்றிய விருந்தினர்களின் கருத்துகள் மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தன.
இங்கு பகிரப்பட்டுள்ள பதிவில் பல்கலாசார நலன்கள் அமைச்சர் இந் நிகழ்வு இந்த வருடம் முழு உலகிலேயே பிரமாதமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவாக இது இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” எனும் வாய்மொழிக்கமைய அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயலாற்றி இந் நிகழ்வின் வெற்றிக்காக உழைத்திருந்தமை பாராட்டுக்குரியது.