பேர்த் வடக்கு தமிழ்ப் பள்ளியில் தமிழ்த்தொண்டராசிரியர்களாக சேவையாற்ற விருப்புடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பி.ப. 2.45 முதல் 5.00 மணி வரை இடம்பெறும்.
பின்வரும் தகைமைகள் இருப்பது விரும்பத்தக்கது:
– தமிழ் மொழியில் கல்வி நிலை தேர்ச்சி.
– மாணவர் மனநிலை அறிந்து சேவையாற்றும் வல்லமை.
– ஆசிரிய முன் அனுபவம் இருந்தால் நல்லது.
அத்தோடு அனைத்து தமிழ்ப்பள்ளி நாட்களிலும் ஒழுங்காக வருகை தரக்கூடியதாயிருத்தல் மிகவும் நன்று.
ஏலவே ஆஸ்திரேலியாவில் வசிப்பதுடன் பேர்த் வடக்கு தமிழ்ப் பள்ளியில் உடனடியாக சேவையாற்றும் நிலையில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க விருப்புடையோர் தமது விண்ணப்பங்களை ஆசிரியர் இணைப்பாளர்கள் திருமதி சத்தியப்பிரியா சரவணகுமார் மற்றும் திருமதி மாலதி சுரேஸ் ஆகியோரின் கவனத்துக்கு PerthNorthTamilSchool@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.